15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை


இந்தியாவில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகிறார்கள்.

நாட்டின் ஹரியானா மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

15 வயது சிறுமி ஒருவர் கடந்த 9-ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

சிறுமியின் குடும்பத்தார் அவரை தேடி வந்த வந்த நிலையில் அங்குள்ள கால்வாயில் இரு தினங்களுக்கு முன்னர் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்த நிலையில் ஒன்றுக்கும் மேற்ப்பட்டோரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள ஒரு நபர் கடந்த 9-ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதால் அவன் மீது சந்தேகம் உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிசில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்