நாடு கடந்த தமிழீழ அரசின் தைத்திருநாளும் நீதிக்கான நிதிதிரட்டும் அதிஸ்டலாப சீட்டிழுப்பும்.

எமது தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை நடத்தி முடித்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தையும் அதில் அங்கம் வகிக்கும் போர்க்குற்றவாளிகளுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்கவும் எம்மக்களின் நியாயமான போராட்ட வடிவங்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசானது சர்வதேச அரங்கில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் எதிர்வரும் 20.01.2018 சனிக்கிழமை The Archbishop Lanfranc Academy, Mitcham Road, Croydon, CR9 3AS என்ற இடத்தில் மதியம் ஒரு மணியளவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தைத்திருநாளை சிறப்பிக்கும் உலகத்தமிழர்களின் தொன்மையான கலைகலாச்சார பண்பாடுகளை உலகுக்கு பறைசாற்றும் மரபுத்திருநாள் (தைப்பொங்கல் நிகழ்வு) நடைபெற உள்ளதுடன் நீதிக்கான நிதி பெற்றுக்கொள்ள 10பவுண் தங்கம் முதலாம் பரிசும் தலா 1 பவுண் கொண்ட 10 ஆறுதல் பரிசுகளையும் £2 பெறுமதியான ரிக்கற்களை உடைய அதிஸ்டலாப சீட்டிழுப்பும் நடைபெறுகின்றது.

குறித்த நிகழ்வு மற்றும் In The Name Of Budha திரைப்படத்திற்கான பரப்புரைகளும் கடந்த பொங்கல நாளன்று இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய முன்றலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது

அத்துடன் எதிர்வரும் 19,20&21 ம் திகதிகளில் கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வு இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவலும் படங்களும்
Yathursan Sornalingam
TGTE SCH MEDIA
UK

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்