கனடாவுக்கு பறந்த பாஸ்போர்ட்: விமான நிலையத்தில் தவித்த பயணி

கனடாவுக்கு பறந்த பாஸ்போர்ட்: விமான நிலையத்தில் தவித்த பயணி


டெல்லி விமான நிலையத்தில் பஹ்ரைனில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர் ஒரு மணிநேரமாக தவித்த சம்பவம் நடந்துள்ளது.

பஹ்ரைனில் வசித்து வரும் இந்தியர் சத்யேந்திர சிங், சமீபத்தில் தனது பெற்றோரை சந்திக்க லக்னோ வந்தவர், பஹ்ரைன் செல்வதற்காக டெல்லி விமான நிலையம் சென்றுள்ளார்.

இவரது பாஸ்போர்ட் இருந்த பையை கனடா செல்லும் பயணி தவறுதலாக எடுத்துச்சென்று விட்டதால் அங்கேயே தத்தளித்துள்ளார்.

செக்யூரிட்டி செக்அப் நீண்ட வரிசை இருந்ததால், தனது கைப்பையை ஸ்கேன் செய்ய கொடுத்தார், வரிசை முடிந்து ஸ்கேன் பண்ணும் இடத்துக்கு வந்தால் கைப்பை மாயமானது.

என்ன செய்தென்று தெரியாமல் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் நடந்ததை எடுத்துக் கூறினார், அவர்களும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தான் கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் தவறுதலாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

கையில் பணமும் இல்லாமல், மாற்று உடையும் இல்லாமல் தவித்த சத்யேந்திர சிங் உடனே உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார், அதுவும் சரியாக அமையாததால் ஏர் இந்தியா நிறுவனம் தங்களது லாஞ்ஜில் தங்கவைத்து உதவியது.

இதனை தொடர்ந்து கனடா சென்ற அந்த பயணியை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றனர், கடும் முயற்சிக்கு பின் பாஸ்போர்ட்டை பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார் சத்யேந்திர சிங்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்