அதிக ஆடை அணிந்து சென்றதால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர்

அதிக ஆடை அணிந்து சென்றதால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர்


ஐஸ்லாந்தில் இருந்து இங்கிலாந்து செல்ல முயன்ற நபர் அதிகமான ஆடைகள் அணிந்திருந்த காரணத்தால் விமான நிலையத்தில் தடுத்து நிறத்தப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ryan Hawaii என்ற நபர் ஐஸ்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு செல்வதற்காக Keflavík விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இவர் 8 பேண்ட் மற்றும் 10 டிஷர்ட்டுகளை தனது உடலில் அணிந்து சென்றுள்ளார், விமான நிலையத்தில் வைத்து சோதனை செய்கையில், சந்தேகமடைந்த ஊழியர்கள் ஆடைகளை களைய சொன்னதற்கு, Ryan ஒத்துழைக்கவில்லை.

மேலும், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சோதனைக்கு ஒத்துழைக்காமல் அதே இடத்திலேயே நின்றுகொண்டிருந்துள்ளார்.

இதனால் பொலிசார் வரவழைக்கப்பட்டு, Ryan கைது செய்யப்பட்டு விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டார்.

அதன்பின்னர், விசாரணைகளுக்கு பின்னர், அவர் வேறு விமானத்தில் செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டார்.

விமான நிலையத்தில் நின்றுகொண்டே, தனக்கு நேர்ந்தவை குறித்து Ryan தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இவ்வாறு நடக்கும்போது தான் மிகவும் அமைதி காத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மட்டுமே பொலிசார் வரவழைக்கப்பட்டனர் என்றும் வேறு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்