இலங்கை மட்டில் கனடா லிபரல் அரசின் அசமந்த போக்குபற்றி கவலை….

வெளிவிவகார அமைச்சுக்கான கொன்சவர்டிவ் கட்சியின் நிழல் பிரதி அமைச்சர் தமிழ் தலைவர்களுடன் சந்தித்து இலங்கை மட்டில் லிபரல் அரசின் அசமந்த போக்குபற்றி கவலை

ஓட்டாவா, ஒன்ராரியோ – நாடாள மன்ற உறுப்பினர் கார்னட் ஐPனுஸ் அண்மையில் தமிழ் சமூகத்தின் தலைவர்களை சந்தித்து தற்போதைய இலங்கை நிலைபரம் பற்றியும் கனடா எவ்வகையில் உதவமுடியும் என உரையாடினார்.

இலங்கை மட்டில் லிபரல் அரசின் அசமந்த போக்குபற்றியும் தேர்தலில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கவனத்தில் கொள்ளாதது பற்றியும் கூறி இவ்வரசின் மேல் அதிக அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலமே சில பெறுபேறுகளை அடையமுடியும் எனவும் கூறினார்.

இலங்கையின் சமூகங்களிடையே இணக்கப்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லையெனவும், கல்வி போன்ற விடயங்களில் தமிழருக்கு எதிரான வரலாற்று திரிபுகளும், வடபகுதிக்கான உதவிகள் மிகக்குறைவாகவும், தமிழ் பொலிஸ் உத்தியோகர்கள் போதாமையையும், பொருளாதார அபிவிருத்தியில் பல தடைகளை ஏற்படுத்துவதாகவும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் எடுத்துக்கூறினர்.

கொன்சவர்டிவ் கட்சி இக்குறைகளை முன்னிலைப்படுத்தி மத சுதந்திரத்துக்கான செயலகம் போன்றவற்றை மீளவும் உருவாக்கவும் தமிழ் சமூகத்தின் மற்றும் பல வேண்டுகோள்களுக்கு செவிமடுத்து உழைக்கத் தயாராகவும் இருப்போமென ஜினுஸ் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்