ஸ்கெட்ச் ரிசல்ட் நிலவரம் என்ன?

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா ‘ஸ்கெட்ச்’ படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளதை தெரிவிக்கும்வகையில் சமீபத்தில் ‘சக்சஸ் மீட்’ நடத்தப்பட்டது.

அப்போது ‘கலைப்புலி’ எஸ்.தாணு பேசும்போது, ‘விஜய் சந்தர் அடுத்து இயக்கவுள்ள படத்தையும் எங்களது நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும்’என்று அறிவித்து இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

‘பொங்கலை முன்னிட்டு தமிழகமெங்கும் வெளியிடப்பட்ட ‘ஸ்கெட்ச்’ படம் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இந்த படம் முதலில் இரண்டு தியேட்டர்களில் தான் திரையிடப்பட்டது. ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மேலும் இரண்டு தியேட்டர்களில் ‘ஸ்கெட்ச்’ திரையிடப்பட்டுள்ளது.

மலேசியாவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மலேசியாவில் மட்டும் இப்படம் 444 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ‘ஸ்கெட்ச்’படம் வருகிற 26-ஆம் ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தமிழில் கமர்ஷியலாக வெற்றிப் படமாக அமைந்துள்ளதை தொடர்ந்து ஹிந்தியில் ரீ-மேக் செய்து தயாரிக்கவும் பல பேர் தொடர்பு கொண்டுள்ளனர். அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.” என்று ஸ்கெட்ச் வெற்றிப்படம் என்பதற்கான புள்ளி விவரங்களைப் போட்டுத்தாக்கினார்.

அதேசமயம், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களின் கருத்தோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதாவது ஸ்கெட்ச் படத்தினால் நஷ்டம் வரும் என்கின்றனர்.

யார் சொல்வது உண்மை?

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்