பொங்கல் முடிந்து தீபாவளி வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்; விஜய் ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

தலைப்பைப் பார்த்து குழம்பிப் போயுள்ளவர்களுக்கு இடையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏன் அப்படி சொன்னார் என்பது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாவதை முன்னிட்டு, படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று அவருடைய டுவிட்டரில், படத்தின் துவக்கத்தைப் பற்றியும், எப்போது படம் வெளியாகப் போகிறது என்பதைப் பற்றியும் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய டுவிட்டரில் ‘இனிய தீபாவளி வாழ்த்துகள் தோழர்களே’ எனக் குறிப்பிட்டதும் அதை விஜய் ரசிகர்களும், ஏன் அஜித் ரசிகர்களும் கூட உடனடியாகப் புரிந்து கொண்டார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் வெளிவரும் தீபாவளி தினத்தில்தான் அஜித் நடிக்க உள்ள ‘விஸ்வாசம்’ படமும் வெளிவரப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படமும் வரப் போகிறது. அதனால், இந்த வருடத் தீபாவளிக்கு மோதல் கடுமையாகவே இருக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்