சொடக்கு பாட்டுக்கு வந்த சோதனை.

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் சமீபத்தில் வெளிவந்தது. விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் “சொடக்கு மேல சொடக்கு போடுது…” என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாஸ் பாடியுள்ளார். இந்த பாடலில் “விரட்டி விரட்டி வெளுக்கத் தோணு, அதிகார திமிரை பணக்கார பவரை தூக்கி போட்டு மிதிக்க தோணுது…” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த வரிகள் அரசியல்வாதிகளை மிரட்டுவதுபோல அமைந்துள்ளது. எனவே அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று அ.தி.மு.நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “இந்த பாடல் அரசியல்வாதிகளையும், மிரட்டும் நோக்கிலும், கிண்டல் செய்யும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பாடலுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை வருகிற 27ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

மூலக்கதை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்