இலங்கைக்கு செல்லும் இந்திய அணி!

இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்குபெறும் 7 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியின் போட்டிகள் பிப்ரவரி 24-ல் முடிவுக்கு வருகிறது.

அதே போல வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கையின் போட்டிகள் பிப்ரவரி 18ல் முடிவடைகிறது.

இத்தொடருக்கு பின்னர் இந்தியா, வங்கதேச அணிகள் இலங்கைக்கு செல்லவுள்ளது.

வங்கதேசம், இலங்கை, இந்தியா ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் 7 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 6-ஆம் திகதி தொடங்கவுள்ளது.

போட்டி அட்டவணை விபரம்,
6 மார்ச் 2018: இலங்கை – இந்தியா

8 மார்ச் 2018: வங்கதேசம் – இந்தியா

10 மார்ச் 2018: இலங்கை – வங்கதேசம்

12 மார்ச் 2018: இந்தியா – இலங்கை

14 மார்ச் 2018: இந்தியா – வங்கதேசம்

16 மார்ச் 2018: வங்கதேசம் – இலங்கை

18 மார்ச் 2018: இறுதி போட்டி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்