துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு விஜய், முருகதாஸ் கூட்டணி..

மெர்சலான வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ஸ்பைடரின் தோல்விக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து வெற்றிதான் என்ற இலக்குடன் களம் இறங்கியிருக்கிறார். இது விஜய்யின் 62வது படம். விஜய் ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு, சோலோ காமெடியனாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடந்தது. தனியார் சொகுசு விடுதியில் நடந்த இந்த படப்பிடிப்பை விஜய் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். விஜய், கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகள் நேற்று படமானது. துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு விஜய், முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வர இருக்கிறது.

1 கருத்து

  1. My empishan director Vijay annauku na story vajiruke

உங்கள் கருத்தை சொல்லுங்கள்