திசர பெரேரா அசத்தல்!!! : 198 ஓட்டங்களுக்கு சுருண்டது சிம்பாப்வே!

இலங்கை அணிக்கெதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 198 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி சிறப்பான ஆரம்பத்தை வெளிப்படுத்திய சிம்பாப்வே அணி விக்கட்டிழப்பின்றி 43 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும் பின்னர் சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணியின் திசர பெரேரா முதல் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தினார். தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்திய இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் சீரான இடைவேளைகளில் விக்கட்டுகளை சாய்த்தனர்.

சிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் 58 ஓட்டங்களையும், கிரீமர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணிசார்பில் திசர பெரேரா 4 விக்கட்டுகளையும், நுவான் பிரதீப் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்