நடிகை பாவனாவின் திருமணம்….

நடிகை பாவனாவும், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனும் 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஏற்கெனவே, இவர்களது திருமண நிச்சயதார்த்தம் போன ஆண்டு நடந்து முடிந்தது. அந்த தருணத்தில், 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவில்லை. இதற்கிடையில், திருமணம் தள்ளி வைப்பிற்கு, நவீன் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் பாவனாவின் பெற்றோர் இதை மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நவீன் திருமணத்தை தள்ளி வைக்கவில்லை என்றும், நவீனின் தாயார் அண்மையில் இறந்ததால் தான், திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்கள். மேலும், டிசம்பர் 22 ஆம் தேதி திருமணம் நடக்கும் என்றும் கூறினார்கள். ஆனால் மீண்டும் ஜனவரி மாதம் திருமணத்தை தள்ளி வைத்தார்கள்.

இந்த நிலையில், தற்போது ஜனவரி 22 ஆம் தேதி இவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக பாவனாவே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் இரண்டு நாட்கள் முன்பு மீண்டும் அவரது திருமணத்தை ஏப்ரல் மாதம் தள்ளிவைக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அந்த செய்தி பொய் என்று பாவனாவின் சகோதரர் தெரிவித்திருந்தார். முன்பு உறுதிப்படுத்தியது போல் இன்று அவரது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்