மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற தொழிற்பயிற்சி கண்காட்சி.

மன்னார் நிருபர்-
(22-1-2018)

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகளிர் அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இணைந்து நாடத்திய சுய தொழில் பயிற்சியில் கலந்து கொண்ட யுவதிகளின் சுய தொழில் கண்காட்சி இன்று திங்கட்கிழமை மதியம் மாந்தை மேற்கு பிரதேச்ச செயலகத்தில் இடம் பெற்றது.

இதன் போது பல்வேறு துறைகளில் சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதிகளின் சுய தொழில் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது பல்வேறு தொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்ய யுவதிகளின் ஆக்கங்கள் அங்கு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்