இதுவரை தோல்வியை சந்திக்கால் வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கிறது பார்சிலோனா அணி

ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றும் வரும் கால்பந்து லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் பார்சிலோனா பயணம் செல்கிறது.

லா லிகா தொடரில்நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் பெட்டிஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் அசுர பலத்துடன் விளையாடிய ரியல் பெட்டிஸ் அணி முதல் பாதி நேரம் வரை பார்சிலோனா அணியை கோல் அடிக்க விடவில்லை.

2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 59-வது நிமிடத்தில் இவான் ராகிடிக் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் 64-வது நிமிடத்தில் மெஸ்சியும், 69-வது நிமிடத்தில் சுவாரஸூம் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

மேலும், 80-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோலும், 89-வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோலும் அடிக்க பார்சிலோனா 5-0 என ரியல் பெட்டிஸ் அணியை நைய புடைத்தது.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று கால்பந்து லீக் ஆட்டங்களில் இந்த சீசனில் பார்சிலோனா அணி மட்டுமே இதுவரை தோல்வியை சந்திக்கால் வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கிறது.

லா லிகா தொடரில் பார்சிலோனா 20 போட்டியில் விளையாடி 17 வெற்றி 3 டிரா மூலம் 54 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் 43 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வாலன்சியா 40 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரியல் மாட்ரிட் 19 போட்டியில் 35 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்