காயம் காரணமாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை நட்சத்திர வீரர் விலகல்!

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் குசல் பெரேரா விலகியுள்ள நிலையில், தனஞ்செய டி சில்வா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையில் நடந்த போட்டியில் இலங்கை வீரர் குசல் பெரேராவுக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறியுள்ளதால் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரேராவுக்கு பதில் தனஞ்செய டி சில்வா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை மொத்தம் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தனஞ்செய கடைசியாக கடந்தாண்டு யூன் மாதம் இலங்கை சர்வதேச ஒருநாள் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்