கனேடிய பிரதமர் அணிந்து வந்த சோக்ஸால் வியப்பில் ஆழ்ந்த மக்கள்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சர்வதேச பொருளாதார மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் உலகின் பெரும்பான்மையான வளரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ அங்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா யூசஃப்சாய் என்பவரை சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்நிலையில் மாநாட்டிற்கு கனேடிய பிரதமர் அணிந்து வந்த சோக்ஸ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் அணிந்திருந்த சோக்ஸ் நீல வண்ணத்தில் மஞ்சள் வண்ண அன்னப்பறவையுடன் கூடியதாக அமைந்திருந்தது.

46 வயதாகும் இவர் இதுபோன்று கண்ணைக்கவரும் சோக்ஸ் அணிந்து சர்வதேச தலைவர்களை சந்திப்பது இது முதன் முறை அல்ல. இதற்கு முதல் ஒரு தடவை சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரை நியூயார்க் நகரில் சந்தித்த போது கனேடிய பிரதமர் அப்போது பிரபலமாக பேசப்பட்ட ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் கதை அம்சம் கொண்ட சோக்ஸ் ஒன்றை அணிந்திருந்தார்.

மேலும் கடந்த ஆண்டு மே மாதம் இரு வேறு சோக்ஸ் அணிந்து ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்