போர்க்களமும் தேர்தலும்

போர்க்களமும் தேர்தலும்
+++++++++++++++++++++
Mohamed Nizous

அங்கு
வாள் வீச்சில்
தோள்கள் துண்டாகும்
இங்கு
வாய் வீச்சில்
வாக்குகள் உண்டாகும்

போர் முரசு கொட்ட
பொழுதுகள் துடிப்பாகும் அங்கு.
போஸ்டரில் முரசு தெரிய
புன்னகை நடிப்பாகும் இங்கு.

அங்கு
பாசறை அடிப்பார்.
இங்கு
பேஷ்புக்கில் வெடிப்பார்.

கைக்குக் கேடயம்- மைக்கும் மேடையும்
நெஞ்சில் கவசம்- பஞ்சு டயலொக்
நெடும் போர் நடக்கும் அங்கு
கடும் பேர் வாங்குவார் இங்கு

குதிரையில் அமர்ந்து
குருதியை ஓட்டி
கொன்று குவிப்பார் அங்கு.
கதிரையில் அமர்ந்து
சுருதியை ரசித்து
மென்று சுவைப்பார் இங்கு.

மெய்யும் மேனியும்
கையும் அறுபட
மெய்யாய் போராட்டம் தொடரும்
பொய்யும் புளுகும்
பெய்யும் மழையென,
தொய்யும் தலைகள் தூக்கத்தால்

தோற்றால்
தொடர்வது மரணம் -போரில்
தோற்றால்
தொடர்வது கரணம்-தேர்தலில்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்