காக்கைச் சிறகினிலே…

காக்காமார்களெல்லாம் நொந்தலாலா-இங்கு
கட்சியாகப் பிரிந்திருக்கார் நொந்தலாலா
கூக்குரல் கோஷங்கள் நொந்தலாலா-சிலர்
குடும்பத்தையே பகைக்கின்றார்  நொந்தலாலா

கேட்கும் கட்சிக்காக
நொந்தலாலா-சிலர்
கிறுக்கனாகிப் போனாரடி நொந்தலாலா
காக்கா பிடிக்கின்றார் நொந்தலாலா-சிலர்
காலையும் பிடிப்பாரடி நொந்தலாலா

ஆட்கள் சேருமிடம் நொந்தலாலா-இவர்
ஆஜராகி சலாம் சொல்வார் நொந்தலாலா
கூட்டம் அதிகம் என்றால் நொந்தலாலா-வாங்கிக்
குளிர் பானமும் கொடுப்பாரடி
நொந்தலாலா

வீட்டுக் கதவு தட்டி நொந்தலாலா-தினம்
விசாரிப்பார் சுகசெய்தி நொந்தலாலா
ரோட்டில் கொடி கட்டி நொந்தலாலா-பலர்
ஓட்டுக்காய் ஓடுகிறார் நொந்தலாலா

நோட்டும் கொடுக்கின்றார் நொந்தலாலா-சிலர்
போட்டும் தள்ளுவாரடி
நொந்தலாலா
ஆட்டம் முடிந்து வென்றால் நொந்தலாலா-பின்
ஆட்டிப் படைப்பாரடி நொந்தலாலா

கேட்கும் ஆட்களெல்லாம்
நொந்தலாலா
கெட்டவர் இல்லையடி நொந்தலாலா
பாட்டில் சொன்னதெல்லாம் நொந்தலாலா
பலருக்குப் பொருந்தாதடி நொந்தலாலா

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்