மனிதர்களை போல் சவர்க்காரம் இட்டு குளிக்கும் எலி.

மனிதர்களை போல் சவர்க்காரம் இட்டு குளிக்கும் எலியின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

பெரு நாட்டை சேர்ந்த டி.ஜே. ஜோஸ் கோரி என்பவர் எலி ஒன்றை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். ஒருநாள் குளியறையில் எலி மனிதர்களை போன்று சவர்க்காரம் இட்டு குளிப்பதை பார்த்த கோரி அதனை காணொளி எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இணையதளத்தில் 37 லட்சத்திற்கும் மேலானோர் பார்கையிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பலர் தன்மீது உள்ள சவர்க்காரத்தையே எலி துடைக்க முற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காணொளியில் மனிதர்களை போன்று குளிப்பதால் எலி பலரை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்