முகனூல் உல நீதி

ஆதாரம் இல்லாமல் upload வேண்டாம்
அடுத்தவரை tag செய்து போட வேண்டாம்
மோதல் தரும் கருத்துக்களை எழுத வேண்டாம்
முக நூலில் தூஷனங்கள் பாட வேண்டாம்

tamilcnn.lk

ஆகாத வீடியோக்கள் செயார்  வேண்டாம்
அருவருப்பு போட்டோக்கள் போட வேண்டாம்
மோகத்தில் இன்பொக்ஸில் பிதற்ற வேண்டாம்
முக நூலின் ஸ்க்றீன் ஷொட்டை மறக்க வேண்டாம்

அஞ்சாமல் கள்ள ஐடி திறக்க வேண்டாம்
அடுத்தவரின் புரபைல் போல் போலி வேண்டாம்
செஞ்ச வேலை அத்தனைக்கும் ஷெல்பி வேண்டாம்
சீன் போட்டு படம் காட்டி பம்ம வேண்டாம்

பொஞ்சாதி போட்டோவைப் போட வேண்டாம்
பொதுவாகப் பொம்புளைகள் போட்டோ வேண்டாம்
நஞ்சாகும் எடிட்களில் சிக்க வேண்டாம்
நன்கறியா ஆட்களுடன் சற் வேண்டாம்

புற்று நோய்ப் போஸ்ற் அனைத்தும் நம்ப வேண்டாம்
போஸ்ற்கள் பல பொய்யாகும் மறக்க வேண்டாம்
முற்று முழுதாய் fb ல் மூழ்க வேண்டாம்
முழு நாளும் நோண்டிக்கிட்டு இருக்க வேண்டாம்

லைக் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
லைபில் உள்ள மகிழ்வுகளைத் தவற வேண்டாம்
சைக்கோ போல் போணையே நோக்க வேண்டாம்
சகலதுக்கும் fb யையே நாட வேண்டாம்

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்