யாழ்ப்பாணத் தோசை செய்ய தெரியுமா

செய்ய தேவையான பொருட்கள் :-

  1. கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு
  2. அவித்த வெள்ளை மா – 1 சுண்டு
  3. அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
  4. வெந்தயம் – 1 தே. கரண்டி
  5. சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி
  6. மிளகு – 1/2 தே. கரண்டி
  7. உப்பு – தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி

தாளிப்பதற்கு :-

  • சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)
  • செத்தல் மிளகாய் – 3
  • கடுகு – 1/2 தே. கரண்டி
  • பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி
  • கறிவேப்பிலை – 1 நெட்டு 

    tamilcnn.lk

செய்முறை :-

  • உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும்.
  • சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும்.
  • உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.
  • அரைத்த மாவில் அவித்த மா,அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து
    10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும்.
  • புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும்.
  • சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.
  • தாளிதத்தையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக.* (தோசைகளை சம்பலுடன் பரிமாறலாம் )
  • தோசைகளில் நல்லெண்ணெய், அல்லது நெய் விட்டும் சுட்டுக் கொள்ளலாம்.
  • குறிப்பு: தோசை மொற மொறப்பாக விரும்பின், உளுந்துடன் சிறிது பசுமதி, அல்லது சம்பா, அல்லது பொன்னி அரிசியை ஊறவிட்டு அரைக்கவும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்