வேலணை மத்திய கல்லூரியின் ஆண்கள் விடுதிச்சாலை புனரமைப்பு வேலைகள் நிறைவு

ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசுப் பரீட்சையில் சித்திபெற்ற சப்த தீவுகளைச் சேர்ந்த மாணவர்களும் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வலிகாமப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களும் தங்கியிருந்து படிப்பதற்காக அறுபதுகளின் ஆரம்பத்தில் பாடசாலைக்கு முன்பாக பெண்கள் விடுதியும் அதற்குப் பின்புறத்தில் ஆண்கள் விடுதியும் கட்டப்பட்டு இரு விடுதிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படித்து வந்தமை யாவரும் அறிந்தவிடயமாகும். யுத்தகாலத்தில் குறிப்பாக தொண்ணூறுகளில் இருவிடுதிகளிலும் கடற்படையினர் முகாம் அமைத்திருந்தமையால் கட்டிடங்கள் பாழடைந்து பாவனைக்கு உதவாத நிலையிலிருந்தன.

tamilcnn.lk

2011 இல் அதிபராகப் பதவியேற்ற திரு சி. கிருபாகரன் அவர்களது அயராத முயற்சியினால் பெண்கள் விடுதி புனரமைக்கப்பட்டு ஆண்கள் விடுதியாக இயங்கிவருகின்றது. அங்கு தற்போது 30 மாணவர்கள் தங்கிப்படித்து வருகின்றார்கள். இவர்களுக்கான செலவை எமது சகோதர சங்கமான
பிரித்தானியாப் பழைய மாணவர் சங்கம் வழங்கி வருகின்றது.

tamilcnn.lk

தற்பொழுது ஆண்கள் விடுதியைப் புனரமைக்கும் வேலைகள் நடைபெற்று முடியுந்தறுவாயிலுள்ளது. திருத்தப்பட்டபின்னர் தற்போதுள்ள ஆண் மாணவர்கள் இந்த விடுதிக்கு மாற்றப்பட்டுப் பெண்கள் விடுதியில் பெண் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளார்கள் என்பதனைக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சி;. இளஞ்செழியன் (தலைவர்)
வேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்