நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை நாம் அரசாங்கத்தை ஆதரிக்கவும் மாட்டோம் அமைச்சுப் பதவிகளை ஏற்கவும் மாட்டோம்

எமது மக்களுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை நாம் அரசாங்கத்தை ஆதரிக்கவும் மாட்டோம் அமைச்சுப் பதவிகளை ஏற்கவும் மாட்டோம்.எமது கட்சி அன்று முதல் போராடி வருகின்ற கொள்கையின் அடிப்படையில் எம்மை நாமே ஆட்சி செய்கின்ற உரிமை அரசியல் யாப்பின் அடிப்படையில் உறுதி செய்யும் வரை நாம் எதிர்கட்சியிலே இருந்து போராடுவோம் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேசசபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து புளியங்குளத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பின் பேச்சராளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றும் போது எமது கட்சியை தற்போது ஆளும் அரச தரப்பினருக்கு அதரவு வழங்குவதாக பலர் விமர்சிக்கின்றனர்.எமது மக்களுக்கு ஒரு தீர்வு கிட்ட வேண்டும் என்றால் அரசாங்கத்துடன் எமது தேவையை நாம் ஆனித்தரமாக அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான ஒரு தீர்வுத் திட்டம் அரசியல் யாப்பின் அடிப்படையில் உருவாக வேண்டும். எனவே தற்போது இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் சேர்ந்து  ஆட்சி அமைத்துள்ள தற்போதய அரசாங்கத்துடன் நாம்  அடிக்கடி தெரியப்படுத்த வேண்டியுள்ளது.சர்வதேச நாடுகளுடனும் அரசாங்கத்தையும் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது இதனை தவறாக எண்ண முடியாது என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்