இன்று 14-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பேஸ்புக்

உலகம் முழுவதையும் இன்று கிராமமாக சுருக்கி இருக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் தொடங்கப்பட்டு இன்று 14-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது

பள்ளிப்பருவ நண்பர்களையும், தோழிகளையும் மறந்துவிட்ட நமக்கு மீண்டும் நினைவலைகளில் கொண்டுவந்து இணைத்தது இந்த பேஸ்புக். இன்று சேனல்களில் வரும் செய்திகளைக் காட்டிலும், பேஸ்புக்கில் விரைவாக பரிமாறப்படும் செய்திகள்தான் அதிகமாகும்.

13வயது நிரம்பியவர் எவரும் இந்த பேஸ்புக்கில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து உறுப்பினராகலாம்.14 ஆண்டுகளுக்கு முன் ஜூகர்பர்க் மற்றும், அவரின் கல்லூரி தோழர்களாலும் தொடங்கப்பட்ட பேஸ்புக்குக்கு இன்று உலகம் முழுவதும், 450 கோடிக்கும் மேலான பயன்பாட்டாளர்களைக் உள்ளனர்.

2004ம் ஆண்டு, பிப்ரவரி 4-ம் தேதி மார்க் ஜுகர்பெர்க் தனது ஹார்வார்ட் கல்லூரி வகுப்பு தோழர்கள் ஆன்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹியூஸ், டஸ்டின் விட்ஸ் ஆகியோருடன் இந்த பேஸ்புக்கை தொடங்கினார்.

தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட பேஸ்புக் தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது. காப்புரிமை,பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக, பல்கலைக் கழக அதிகாரிகள் மார்க் ஜுக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னரே, ஜுகர்பெர்க் ” தி பேஸ்புக்.” என்னும் புதிய தளத்தினை அமைத்தார்.

2004 பிப்ரவரி 4 ஆம் நாள், ஜுகர்பெர்க் தி பேஸ்புக்.காம் என்னும் தன் தளத்தினை இயக்கத் தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1,500 பயனாளர்கள் இதில் இணைந்தனர்.

ஹார்வேர்ட் பல்கலையில் பட்ட வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் இதில் இணைந்தனர். பின்னர், இந்த தளத்தினை மற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டனர்.

தொடக்கத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள் அனுமதிக்கப்படவில்லை. அக்டோபர் 2005ல், ஒவ்வொரு பயனாளரும் எவ்வளவு போட்டோக்கள் மற்றும் படங்களை அப்லோட் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டது.

இன்று பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள்தான் முக்கிய அம்சங்களாக உள்ளன. 2017-ம்ஆண்டு வரை, இந்த தளத்தில் பதியப்பட்ட படங்களின் எண்ணிக்கை பல லட்சம் கோடியைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. நாள் தோறும் 300 கோடிக்கும் மேலான படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

கல்லூரிகள், பள்ளிகள் என்ற எல்லை வரையறையைத் தாண்டி, நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் வரை விரிந்து பரந்தது. பேஸ்புக் இணைய தளத்தில் பல பிரிவினரும் இணைய, இந்த தளம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. 2006ம் ஆண்டு முதல் 13 வயது நிரம்பியவர்கள் யாவரும் தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம் என விதிமுறை கொண்டுவரப்பட்டது

2006 செப்டம்பரில், யாஹூ நிறுவனம் நூறு கோடி டாலர் கொடுத்து,பேஸ்புக் இணைய தளத்தினை வாங்க முன்வந்தது. ஆனால், விற்கப் போவதில்லை என ஜூகர்பெர்க் அறிவித்தார்.
ஏனென்றால், பணம் சம்பாதிப்பதை தன் இலக்காக என்றைக்குமே எனக்கு இருந்தது இல்லை. இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால், இன்னொரு சமூக தளத்தைத் தொடங்கலாம். அதற்கு இதனையே வளப்படுத்துவேன் என்றார்.

பேஸ்புக் இணையதளத்தின் முதல் 30 மாதங்கள், பயனாளர்களின் தகவல் பக்கங்களைப் பதிந்து இயக்குவதிலேயே இருந்தன. செப்டம்பர் 2006ல், முதல் முதலாக, பேஸ்புக் தளத்தில் செய்திகள் தரப்பட்டன.

நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து, பேஸ்புக் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது.2012 ஆம் ஆண்டு மே மாதம், தன் பொதுப் பங்கு வெளியீட்டினை பேஸ்புக் மேற்கொண்டது. இதன் மூலம் 1,600 கோடி டாலர் திரட்டியது. அமெரிக்க வரலாற்றில், இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.

2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தின் கணக்கின்படி, மாதத்துக்கு 200 கோடி மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். 2017ம் ஆண்டு மதிப்பின்படி பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் ரூ.2.60லட்சம் கோடியாகும் (4,065 கோடி அமெரிக்க டாலர்).

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்