விண்வெளியில், நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்த ரஷிய வீரர்கள்..

tamilcnn.lk

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் அங்கு தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு தங்கியிருக்கும் போது விண்வெளியில் நடந்து ஆய்வகத்தின் ரிப்பேர் பணியை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் விண்வெளியில் ரஷிய வீரர்கள் 2 பேர் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர்.

ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய 2 வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தங்கியுள்ளனர். நேற்று அவர்கள் 2 பேரும் ஆய்வகத்தைவிட்டு வெளியே வந்து விண்வெளியில் நடந்தனர்.

இவர்கள் இருவரும் 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தனர். இந்திய நேரப்படி இரவு 9.04 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.17 மணிவரை நடந்தனர்.

புவியீர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் வீரர்கள் நீண்ட நேரம் நடந்தது சாதனையாக கருதப்படுகிறது. மேலும் இந்த வீரர்கள் முந்தைய சாதனையை முறியடித்தனர். இதற்கு முன்பு 8 மணி 7 நிமிடம் விண்வெளியில் நடந்தது சாதனையாக இருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்