இரா.சம்பந்தன் அவர்களின் 86வது அகவை தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்

 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமாக உள்ள இரா.சம்பந்தன் அவர்களின் 86வது அகவை தினத்தை திருகோணமலை அன்புவழிபுரம் மக்கள் வெகுவிமர்சையாக கேக் வெட்டி கொண்டாடினார்கள் நேற்று பெப்ரவரி 5ம் திகதி அன்புவழிபுரத்தில் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அன்புவழிபுர வேட்பாளர்களான வ.ராஜ்குமார் து.தனராஜ் மற்றும் அபிமன்னசிங்கம் ஆகியோரை ஆதரித்து பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவருடைய அகவை தின கொண்டாட்டம் இடம் பெற்றது.
ஆர்.சுபத்ரன்

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

1 கருத்து

  1. MM.Fazil says: - reply

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் 86வது அகவை தினம் தமிழ் மகளுக்கு முக்கிய செய்திகளை வெளிப்படுத்துகிறது. இவர் குறித்து விமர்சனங்கள் இருப்பினும், தமிழர் அரசியலில் காலத்தின் தேவையாக விளங்குகிறார். உள்நாட்டு யுத்தத்துக்கு பின்னரான தமிழ் அரசியலை கனகட்சிதமாக கொண்டு செல்லும் பெருமை இவரைச்சாரும். இவர் இருக்கும் போது இவரது முக்கியத்துவம் விளங்காது. தமிழ் சமூகம் இவரை இழந்தால் அதன் வலியை குறுங் காலதிலையே அனுபவிக்க வேண்டி ஏற்படலாம். தமிழ் அரசியல் இன்னும் பல கூறுகளாக பிரிந்து அதனூடாக, இருப்பதிலும் பார்க்க பலம் இழந்து போகுமா? என்று என்னத் தோன்றுகிறது. இவரை நீங்கள் இழந்தால், அவர் போன்ற தலைமை ஒன்றை மீண்டும் பெற பல தசாப்தங்கள் எடுக்கும். இவர் குறித்த நீண்ட கலந்துரையாடல் அவசியமாகும்…

உங்கள் கருத்தை சொல்லுங்கள்