உலகில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா?

உலகில் முதன் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டு இந்தவாரத்தில் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதன் பின்னர், பெண்களில் பலர் அரசியல்வாதிகாளாகவும், தலைசிறந்த தலைவர்களாகவும் உச்சம்பெற அது வழிவகுத்தது.

இருப்பினும் அரசியல் களத்தில் பெண்களின் வெற்றிவாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது.

கடந்த 1982 ஆம் ஆண்டு ஹாரிட் ஹர்மான் பிரித்தானியாவில் எம்.பி.யாக தெரிவானபோது பாராளுமன்றத்தில் மொத்தம் 19 பெண் உறுப்பினர்களே தெரிவாகியிருந்தனர்.

ஆனால் தற்போது மொத்தமுள்ள 650 உறுப்பினர்களில் 208 பேர் பெண்கள். இருப்பினும் உலக அளவில் பெண்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பிரித்தானியா 37-வது இடத்திலேயே உள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள பட்டியலில், உலகில் அதிக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட நாடாக ருவாண்டா உள்ளது. மொத்தம் 80 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 49 பேர் பெண்கள்.

பெண் உறுப்பினர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியல்:

ருவாண்டா 61.3% 49/80
பொலீவியா 53.1% 69/130
கியூபா 48.9% 299/612
ஐஸ்லாந்து 47.6% 30/63
நிகரகுவா 45.7% 42/92
ஸ்வீடன் 43.6% 152/349
செனகல் 42.7% 64/150
மெக்ஸிக்கோ 42.6% 213/500
பின்லாந்து 42.0% 84/200
தென் ஆப்பிரிக்கா 42.0% 167/398
எக்குவடோர் 41.6% 57/137
நமீபியா 41.3% 43/104
மொசாம்பிக் 39.6% 99/250
நார்வே 39.6% 67/169
ஸ்பெயின் 39.1% 137/350
அர்ஜென்டீனா 38.9% 100/257
எத்தியோப்பியா 38.8% 212/547
கிழக்கு திமோர் 38.5% 25/65
அங்கோலா 38.2% 84/220
பெல்ஜியம் 38.0% 57/150
நெதர்லாந்து 38.0% 57/150

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்