மீண்டும் முதலிடத்தில் இந்தியா

தென் ஆப்பிரிக்கா தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்துக்கு இந்தியா மீண்டும் முன்னேறியுள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

tamilcnn.lk

இந்த வெற்றியின் மூலம் இந்தியா (121 புள்ளிகள்) மீண்டும் ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

தோல்வி கண்ட தென்ஆப்பிரிக்க அணி (119 புள்ளிகள்) 2–வது இடத்துக்கு பின்தங்கி இருக்கிறது.

இந்நிலையில் நம்பர் 1 இடத்தை இந்தியா தக்க வைக்க ஒரு விடயத்தை செய்ய வேண்டும்.

அதாவது தென் ஆப்பிரிக்கா தொடரை குறைந்தபட்சம் 4–2 என்ற கணக்கில் வென்றால் முதலிடத்தை தக்க வைக்க முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்