உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அதிகமாகப் பெண்கள் தெரிவு செய்யப்படவேண்டும்

tamilcnn.lk

“ஆண்களும் பெண்களுமாக வெற்றி பெற வேண்டும். பெண்கள் இவ்வாறு முன்வரும்போது பாரதி கண்ட புதுமைப் பெண் உருவாக நாட்கள் செல்லாது”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்

தெரிவித்ததாவது:

அரசியல் தீர்வு ஏற்படுகின்றபோது, மத்திக்கும் மகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படும். அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகமான அதிகாரங்கள் பகிரக்கப் படவுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும் போது உங்களது கிரா மங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை நீங்களே வகுக்க முடியும். வெளிநாடுகளிலிருந்து நிதிஉதவிகளைப் பெறவும், மாகாண சபையிடமிருந்து தேவைகளை நிறைவேற்றமும் உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு வரிகளை விதித்து அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது.

மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு அதிகமாக முயற்சி செய்கிறார். எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தைச் செலவு செய்கிறார். உலக நாடு களுடன் இணைந்து எமது இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத் ை – நாம் இழந்துவிடக்கூடாது.இந்தச் காரணத்திற்காக இந்தத் தேர்தலில் எங்களுடைய மக்கள் பிளவுபட்டு எதிரிகளுக்கு வாக்களிக்காமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்  என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்