எமது மக்கள் த.தே.கூ.ஆழமாக அவதானித்தே ஒவ்வொரு தேர்தலும் தமது ஆணையை எமக்கு வழங்குகிறார்கள் – இரா.சம்பந்தன்

தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள் அவர்களின் பிறப்புரிமையின் அடிப்படையில் சுயரிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக எமது மக்கள் நடைபெற்ற எல்லாத் தேர்தலகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளனர்.அதன் நிமிர்த்தம் எத்தனை இன்னல்கள் வந்த போதும் உறுதியாக அக் கொள்கையில் எமது கட்சி தமிழருக்கான தீர்வுக்காக போராடி வருகின்றது.என தமிழ் தேசியச் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம் பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து அவர் உரையாற்றும் போது கடந்த பல காலமாக நடைபெற்று வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் சரி மாகாணசபை தேர்தலிலும் சரி உள்ளுராட்சித் தேர்தலிலும் எமது மக்கள் எமது நடவடிக்கையை ஆழமாக அவதானித்தே எம்மை ஆதரிக்கின்றனர்.அது போல எமது உரிமைப் போராட்ட பயணத்தில் பெப்ரவரி 10ம் திகதி நடக்கவுள்ள தேர்தல் ஓர்; அங்கமாகும் என்பதையும் நான் ஞாபகப்படுத்துகின்றேன்.
மக்கள் தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தி குடும்ப ஆட்சியாகவும் தமிழ் மக்களை அழித்த ஆட்சியையும் மாற்றினார்கள் இன்று புதிய அரசாங்கம் ஒன்று அமைந்துள்ளது.அந்த அரசாங்கம் நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்க அரசியல் யாப்பை உருவாக்கின்றது.இடைக்கால அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம் பெற்று இந்த வருடம் முடிவதற்குள் புதிய அரசியல் சாசனம் உருவாக வேண்டும் என நாம் விரும்புகின்றோம்.அந்த நடவடிக்கையில் நாம் துரிதமாக முயற்சித்து வருகின்றோம்.
ஆகவே இது ஒரு சாதாரண உள்ளுராட்சி மன்ற தேர்தல் அல்ல மக்களின் கருத்தை அறிய எடுக்கப்படும் நடவடிக்கை என்று கூறலாம்.இன்று இலங்கையின் தேசியப் பிரச்சினையான தமிழ் மக்களுக்கான தீர்வு விடயம் முன்பு எப்போதும் இல்லாத அளவு சர்வதேச சமூகத்தால் பேசப்படகிறது.சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றது.ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அதல் சரிசனையாக உள்ளது.
இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளராட்சி மன்றத்தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை நாம் மீண்டும் பெற விரும்புகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

tamilcnn.lk

tamilcnn.lk

tamilcnn.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்