மூதாட்டி ஒருவரின் குடிசை தீயில் எரிந்து நாசம்!

tamilcnn.lk

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் மூதாட்டி ஒருவரின் குடிசை தீயினால் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முற்கொட்டாஞ்சேனை சாத்திரியார் வீதியை அண்மித்த பகுதியில் வாழும் பொன்னையா பிள்ளையம்மா (வயது 71) என்பவரின் குடிசையே எரிந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது அக்குடிசையில் மூதாட்டி இருந்திருக்கவில்லை என்றும் ஆயினும், குடிசையில் இருந்த உடமைகள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்