தலைமுடி அடர்த்தியாக வளர

tamilcnn.lk

எல்லா பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் ஒரு சில காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.

இதை தடுக்க இயற்கை வழிகள் பல உண்டு, இருப்பினும் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி சாறு தைலம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறப்படுகின்றது.

தலைமுடி வளர
1 கப்- கீழா நெல்லி இலை சாறு
1 கப்- பொன்னாங்கண்ணி இலை
1 கப்- எலுமிச்சை சாறு
6 கப் நல்லெண்ணெய்
கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள், இதில் மேல் கூறிப்பிட்ட கலவைகளை கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள்.

தைல பதத்தில் வந்ததும், காய வைத்த நெல்லிக்காய் பவுடர்- 10 கிராமை இதில் போடுங்கள். பிறகு இந்தத் தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும் மற்றும் பேன் மற்றும் பொடுகும் தொல்லையும் ஒழியும்.

தலை சுத்தமாக வைத்திருக்க
1 கப்- பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்தசாறு.
2 கப்- அருகம்புல் சாறு
2 கப்- தேங்காய் எண்ணெய்
1 கப்- தேங்காய்ப் பால்
மேல்கூறப்பட்டவாறு ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள், பின் தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள்.

தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்தத் தைலத்தைத் தேய்த்து வாருங்கள், இவ்வாறு செய்வதனால் தலை சுத்தமாகி விடும்.

இளநரை போக
கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித்தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள். இது இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் எலுமிச்சைசாறு 1 டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

இதைத் தலைக்கு பேக் ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் 2 முறை இந்த பேக் போட்டு குளித்து வந்தால், இளநரை வழுக்கை என்பவற்றுக்கு நிரந்தர தீர்வு தரும்.

வழுக்கையில் முடி வளர
செம்பருத்தி பூ 1 கப், கரிசலாங்கண்ணி இலை 1 கப் இரண்டையும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்குங்கள்.

இதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டுங்கள். இதனுடன் 3 கப் தேங்காய் எண்ணெய் கலந்து தண்ணீர்ப் பதம் போகும் வரை. (அதாவது சுமார் 10 நாட்கள்) வெயிலில் வைத்து எடுங்கள்.

இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். இதனை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்