நண்பர்களுக்குள் யார் பணக்காரன் என்ற போட்டி வந்ததால் பணத்தை கொளுத்திய நண்பர்கள்

tamilcnn.lk

நண்பர்களுக்குள் யார் பணக்காரன் என்ற போட்டி வந்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் பணத்தை கொளுத்தி போட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள தியான்சங்க் பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றில் கடந்த 24-ஆம் திகதி இரண்டு நண்பர்கள் சாப்பிட வந்துள்ளனர்.

இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யார் அதிகம் பணம் வைத்துள்ளனர் என்ற வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றியதால், சண்டை போட்ட நண்பர்களில் ஒருவர் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

உன்னிடம் உள்ள பணத்தை நீ தீயிட்டு எரித்துக்காட்டு, என்னிடம் உள்ள பணத்தை நான் எரிக்கிறேன் யாரிடம் கடைசி வரை பணம் உள்ளதோ அவரே வெற்றியாளர் என கூறியுள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பணத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சீன ரூபாய்யான 100 யுவான் நோட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக அவர்கள் எரித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, அவர்கள் இருவரையும் கைது செய்து அபராதம் கட்டிய பின்னர் விடுத்துள்ளனர்.

இருப்பினும் இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்