பளை இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­துக்கு மின்­சா­ரம் வழங்க அனு­மதி

tamilcnn.lk

பளை இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­துக்கு, மின்­சா­ரம் வழங்­கு­வ­தற்­கும் அங்­குள்ள சாலைக்குத் தொட­ருந்து பாது­காப்­புக் கடவை அமைக்­க­வும் இலங்­கைத் தொட­ருந்து திணைக்­க­ளத்­தி­னர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­னர். இந்­தி­ரா­பு­ரம் கிராம அபி­வி­ருத்­திச் சங்க நிர்­வா­கத்­தி­ னர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யின் பய­னாக கடந்த சனிக்­கி­ழமை தொட­ருந்துத் திணைக்­கள அதி­கா­ரி­கள் நேரில் பார்­வை­யிட்டு அனு­மதி வழங்­கி­­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த 2000ஆம் ஆண்டு இடம்­பெற்ற இடப்­பெ­யர்­வால் 150 ஏக்­கர் பரப்­ப­ள­வைக் கொண்ட கிரா­மத்­தில் வசித்த மக்­கள் இடம்­பெ­யர்ந்து ஏனைய பிர­தே­சங்­க­ளில் வசித்து வரு­கின்­ற­னர். கடந்த 2011ஆம் ஆண்டு வெடி­பொ­ருள்­கள் அகற்­றப்­பட்ட பகு­தி­க­ளில் 2016ஆம் ஆண்டு டிசெம்­பர் மீள்­கு­டி­ய­மர்வு இடம்­பெற்று 12 குடும்­பங்­கள் மீளக்­கு­டி­ய­ மர்ந்­துள்­ள­ன.

இக் குடும்­பங்­க­ளுக்கு ரஹ்மா (Rahma) நிறு­வ­னத்­தி­ன­ரால் தற்­கா­லிக குடி­யி­ருப்­பு­கள் அமைக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ளன. குடி­யே­றிய மக்­க­ளின் வேண்­டு­கோ­ளின் பிர­கா­ரம் பளைப் பிர­தேச செய­லர் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் ஆகி­யோ­ரின் அறி­விப்­பின் பய­னாக இந்த குடி­யி­ருப்­பு­க­ளுக்கு மின்­வி­நி­யோ­கம் வழங்­க­வென கம்­பங்­கள் நடப்­பட்டு கம்­பி­க­ளும் பொருத்­தப்­பட்­டன.

முதன்­மைச் சாலை­யு­டன் உயர் அழுத்த மின்­கம்­பங்­கள் உள்­ள­தால் தொட­ருந்து சாலைக்கு (தண்­ட­வா­ளத்­துக்கு) மேலாக மின்­சார வயர்­கள் இணைக்க கம்பி வலை­ய­மைப்­ப­தற்கு தொட­ருந்து த் திணைக்­க­ளத்­தின் அனு­மதி பெறப்­ப­டல் வேண்­டு­மென இலங்கை மின்­சார சபை­யால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பாக பளைப் பிர­தேச செய­லர் ஜெ.பர­மோ­த­யன் இலங்­கைத் தொட­ருந்­துத் திணைக்­களப் பொது முகா­மை­யா­ள­ருக்கு அறி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில் இந்­தி­ரா­பு­ரம் கிராம அபி­வி­ருத்­திச் சங்­கத்­தி­னர் கொழும்பு மற்­றும் அனு­ரா­த­பு­ரம் ஆகிய இடங்­க­ளில் உள்ள தொடருந்துத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளைச் சந்­தித்து மக்­க­ளின் குறை­பா­டு­க­ளான மின்­சார விநி­யோ­கம் மற்­றும் தொட­ருந்துக் கடவை அமைத்­தல் போன்ற விட­யங்­க­ளைத் தெரி­வித்­த­தை­ய­டுத்து திணைக்­கள அதி­கா­ரி­கள் கடந்த சனிக்­கி­ழமை நேரில் வந்து பார்­வை­யிட்டு உட­ன­டி­யாக மின்­சா­ரம் வழங்க அனு­ம­திப்­ப­தா­க­வும் தொட­ருந்து கடவை அமைப்­ப­தற்­கான அனு­ம­தியை விரை­வில் அனுப்பி வைப்­ப­தா­க­வும் தெரி­வித்­துச் சென்­ற­னர் என கிராம அபி­வி­ருத்­திச் சங்­கத்­தின் தலை­வர் பா.ஜோர்ஜ் தெரி­வித்­தார்.

இதே­வேளை இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­தில் மீளக்­கு­டி­ய­மர்ந்­துள்ள 12 குடும்­பங்­க­ ளில் ஆறு பேருக்கு மாவட்­டச் செய­ல­கத்­தால் நிரந்­தரக் குடி­யி­ருப்­பு நிர்­மா­ணி க்­கப்­பட்டு வேலை­கள் முழுமை அடைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­தி­ரா­ பு­ரத்­தின் ஏனைய பகு­தி­க­ளில் வெடி­பொ­ருள்­கள் அகற்­றும் பணி­கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­வ­தால் விரை­வில் அங்கு மக்­கள் மீளக்­கு­டி­ய­ மர்த்­தப்­ப­டு­வர்.

கடந்த 2000ஆம் ஆண்டு இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­தில் 172 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 861 பேர் வசித்­த­னர் என­வும் தற்­போது எண்­ணிக்கை மூன்று மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தெ­ன­வும் இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­கள் மீளக்­கு­டி­ய­மர்ந்த பின்­னரே சரி­யான எண்­ணிக்கை வழங்க முடி­யு­ மெ­ன­வும் மீளக்­கு­டி­ய­மர்வு இடம்­பெற்­றால் அனைத்து குடும்­பங்­க­ளும் மீளக்­கு­டி­ய­ம­ரத் தயா­ராக உள்­ள­னர் என அவர் மேலும் தெரி­வித்­தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்