தமிழ் மக்கள் அரசியல் பலத்தை வைத்தே ஒரு நிறந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்-முன்னாள் எம்.பி.எஸ்.வினோ(video)

மன்னார் நிருபர்-

(7-02-2018)

ஒரு கிராம மக்களாகிய நாம் அரசியலில் யாருக்காகவோ இரண்டாக பிரிந்து நிற்கின்ற நிலை வேதனையை ஏற்படுத்துகின்றது.எல்லா விடையங்களிலும் நாம் ஒன்றாக நிற்கின்ற போது இத்தேர்தலில் இக்கிராம மக்கள் இரண்டாக பிரிந்து நிற்பது எமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(6) இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

-கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேவன் பிட்டி கிராமத்திற்கு வழங்கிய ஒரு சந்தர்ப்பத்தை சில வாக்குகளினால் தவர விட்டுள்ளீர்கள்.

-இரண்டாவது தடவையாக மீண்டும் ஒரு சந்தர்ப்பம் இக்கிராமத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினூடாக கிடைத்துள்ளது.குறித்த சந்தர்ப்பத்தை தவர விடாதீர்கள்.ஒரு போதுமே கிடைக்காத வாய்ப்பு.

இந்த வாய்ப்பையும் தவர விட்டால் மீண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒரு வாய்ப்பை தருமா?இது நியாயமா?உங்களிடமே நான் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இக்கிராம மக்கள் முழுமையாக வாக்களித்தால் இவ் ஆசனத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

-இக்கிராமத்தில் இருந்து தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபை உறுப்பினரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரையோ தெரிவு செய்ய முயாத நிலை உள்ளது.எதிர்காலத்தில் ஏற்படலாம்.

இப்போது ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதா?நிச்சையமாக இல்லை.

ஆனால் இந்த பிரதேச சபைக்கான வாய்ப்பு நிச்சையமாக இக்கிராமத்தில் இருக்கின்றது.தேவன் பிட்டி மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடாக அரசியல் பிரதி நிதித்துவத்தை இக்கிராமத்திற்கு கொண்டுவதற்கு தயவு செய்து ஒற்றுமைப்படுங்கள். இந்த அரசியல் பலத்தை வைத்தே நாங்கள் ஒரு அரசியல் தீர்வை , நிறந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த கால தியாகங்கள் இழப்புக்கள் விலை மதிக்க முடியாத அந்த சொத்துக்களின் இழப்புக்கள் ஆகியவற்றிற்கு பரிகாரமாக நாங்கள் அரசியல் தீர்விற்கு நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் எங்களுடைய ஒற்றுமை இன்மை இதற்கு தடைக்கற்கலாக வரக்கூடாது.

-அதே போல் தான் இக்கிராமத்தின் ஒற்றுமை இன்மையும் இப்பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு தடையாக இருக்க கூடாது.என உங்களை தாழ்மையாக கேட்டுக்கொள்ளுகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்