இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன் !

tamilcnn.lk

 

உலகின் இளம் யோகா பயிற்சியாளரான 7 வயது சிறுவனின் வருமானம் லட்சத்தை கடந்து செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் யோகா கலை பிரபலம் அடைந்து வருகிறது.

யோகா மீது அதீத ஆர்வம் கொண்ட மக்கள் அதை கற்றுத் தெரிந்து பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
அவ்வாறு சுன் சுயாங் என்னும் 7 வயது சிறுவன் ஒருவன், தன் 2 வயது முதல் யோகா கலையை முறையாக கற்றுத் தெரிந்து தனக்கென ஒரு பாணியில் கற்றுத் தரவும் தேறியுள்ளான்

tamilcnn.lk

அந்த சிறுவனின் திறமையை கண்டு வியந்த சீன மக்கள் பெரும்பாலும் அவனிடமே யோகா கலை கற்க விரும்புவதால் பல மையங்களில் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவனின் மாத வருமானம் 100000 யுயான் ஆகும்.

சுன் சுயாங்கின் மாத வருமானம் இந்திய மதிப்பின் படி 10 லட்சத்தை கடந்து செல்லும் நிலையில் உலகின் இளம் பணக்கார சிறுவனாக சுயாங் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

மேலும் இந்திய பூர்வீக கலைகளுள் ஒன்றான யோகாவின் மூலம் பல நோய்கள் குணமடைவதாக நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்