வைரலாகும் விஜய் சேதுபதியின் “லேடி கெட்டப்”

‘ஆரண்ய காண்டம்’ பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி முதன் முறையாக பெண் வேடத்தில் நடிக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில், ஷில்பா என்கிற பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியைப் பெண்ணாக மாறியதைப் போல, முன்பு ‘அநீதிக் கதைகள்’ என்று வைத்த டைட்டிலை ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று மாற்றி இருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா .

இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தப் புகைப்படத்தை படக்குழுவினரே வெளியிட்டு இப்படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் ஷில்பா என்றும் தெரிவித்தனர்.

விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், தற்போது இன்னொரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் இருக்கும் இந்தப் புகைப்பட்ம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் சமூக வலைதலங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் விஜய் சேதுபதி, பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு சும்மா ‘நச்’சுன்னு அசத்தலா இருக்கிறார். படத்துக்கு எதிர்பார்ப்பு லெவல் எகிறுது ஜி…!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்