தமிழ் மக்களை கூட்டமைப்பால் மாத்திரமே ஒன்றுபடுத்த முடியும், அரசியல்துறை போராளிகள் தெரிவிப்பு

tamilcnn.lk

எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களை தேசிய ரீதியாக ஒன்று படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே செய்ய முடியும்.

அதனாலேயே முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குகின்றார்கள். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் செயற்பட்ட முன்னாள் போராளிகள் தெரிவித்தனர்.

இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின் னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை மேடைகளில் முன்னாள் போராளிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்த காலத்தில் அவர்களது மேடைகளில் பேசப்படுவதைப் போன்ற பேச்சுக்களை கேட்கும் உணர்வு ஏற்படுவதாக மக்களும் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை முன்னாள் போராளிகள் ஏன் ஆதரிக்கின்றார்கள் என்பது தொடர்பில் அவர்களிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார்கள். “நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் நாம் தேசிய ரீதியாகத் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை உள்ளது.

அதனை இங்குள்ள ஏனைய கட்சிகள் எதனாலும் செய்ய முடியாது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே சாத்தியமாகும். மக்களுக்கான பணியில் கூட்டமைப்பு சரியான பாதையிலேயே பயணித்து வருகின்றது.

இதுவரை காலத்தில் மக்களை ஒன்று திரட்ட வேறு எந்தக் கட்சியாலும் முடிந்திருக்கவில்லை. இனிமே லும் அவர்களால் முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே மக்களுக்கு நம்பிக்கையாகச் செயற்பட்டு வருகின்றது.

இதற்கு அடிப்படைக் காரணம் உலகில் பலம் பொருந்திய இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் எமது தேசியத் தலைவருமான பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்சியாகும். ஆகவே கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்தப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் அவர்களுக்கான ஆணையை வழங்க வேண்டும்’ என்று அரசியல்துறையில் பணியாற்றிய செழியன் தெரிவித்தார். “எமது தேசியத் தலைவர் பிரபாகரன் உருவாக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனைச் சிதைவுபடுத்த பல தரப்புக்கள் முயன்று வருகின்றன. எமது தலைவர் உருவாக்கிய கட்சியை சிதறாது பாதுகாப்பது அனைத்து முன்னாள்  போராளிகளினதும் கடமை. அதனையே நாம் செய்து வருகின்றோம்’ என்று மற்றொரு முன்னாள் போராளியான பாவரசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்