தமிழர் பலத்தை இந்தத் தேர்தலிலும் காட்டுவோம்! – ஆணை வழங்குமாறு சுமந்திரன் கோரிக்கை 

“தமிழர் பிரச்சினை தீர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்துவருகிறது. பல விடயங்களைச் செய்துள்ளோம். இன்னும் நிறைய விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது. அதற்கான ஆணையை மக்கள் வழங்கவேண்டும். தமிழர் பலத்தை  நாங்கள் வெளிப்படுத்தவேண்டும். ஒற்றுமையாக பலமான அரசியல் சக்தியாக நாங்கள் இருந்தாலே பல விடயங்களை சாதிக்கமுடியும். தேர்தலில் அந்த ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கவேண்டும்.”

tamilcnn.lk

 – இவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான மக்களின்  நம்பிக்கை இந்தத் தேர்தலில் மீண்டும் உறுதிப்படுத்தப்படவேண்டும். மக்கள் எங்களிடம் ஓர் ஆணையை வழங்கியுள்ளனர். அவற்றை நாம் படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறோம். மக்களின் நலன்கள், அபிலாஷைகள் பேணப்படும் வகையில் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல நாங்கள் முயன்றுவருகிறோம். நிலைமை எங்களுக்கு சாதகமாகவே உள்ளது. நாங்கள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் பலமாக இருத்தல்வேண்டும்.
மக்கள் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சக்தியாக இருக்கும்போது பல விடயங்களை நாங்கள் செய்துகொள்ளலாம். எமது ஒற்றுமையே அதற்கு முக்கியம். அந்த ஒற்றுமையை ஆணையாக மக்கள் வழங்கவேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்