மும்பையுடன் இணைந்தார் மலிங்கா

tamilcnn.lk

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஐ.பி.எல். தொடரின் கடந்த 10 சீசன்களிலும் மும்பை அணிக்காக விளையாடி வந்தார்.

ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கட்டுகள் வீழ்த்தியதில் முதலிடத்தை வகிக்கும் லசித் மாலிங்க, இவ்வருட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
எனினும் தற்போது லசித் மாலிங்க இவ்வருடமும் அணியுடன் இணைந்துள்ளதாக மும்பை அணியின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் பந்து வீச்சு ஆலோசகராக லசித் மாலிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என மும்பை அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஸ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்