இரண்டு மாற்றங்களுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

tamilcnn.lk

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சிட்டகொங்கில் சமனிலையில் முடிவடைந்தது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி மின்பூரில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணியை பொருத்தவரையில் இரண்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. லஹிரு குமாரவுக்கு பதிலாக ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அகில தனஞ்சய அறிமுகமாகியுள்ளார். இதேவேளை லக்ஷான் சந்தகனுககு பதிலாக தனுஷ்க குணதில இன்று அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்