மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா கனடாவில் காலமானார்

tamilcnn.lk

மூத்த ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா நேற்று (7 ) காலை கனடாவில் டொரொன்டோவில் காலமானார்.

பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், வீரகேசரியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தவர். பின்னர் தகவல் திணைக்களத்திலும் பணியாற்றினார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தவர்.

இலங்கையில் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்ட காவலூர் ராஜதுரையின் கதை வசனம், தயாரிப்பில் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் வெளியான பொன்மணி என்ற திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்