இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளரான பக்கீர் அலி!

TAMILCNN.LK

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பக்கீர் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலமை பயிற்சியாளராக செயற்பட்ட டட்லி ஸ்டெயின்வோல் கடந்த ஆண்டு ஜீலை மாதம் பதவி விலகியதை தொடர்ந்து, இலங்கை தேசிய கால்பந்து அணி தலமை பயிற்சியாளர் இன்றி செயற்பட்டு வந்துள்ளது. மேலும் ஸ்டெயின்வோல் மட்டுமன்றி அவருடன் உதவி பயிற்சியாளர் மற்றும் கோல் காப்பு பயிற்சியாளர்களும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்ற இலங்கை தேசிய கால்பந்து சங்கத்தின் கூட்டத்தில், இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக, இலங்கை தேசிய அணியின் முன்னாள் வீரர் பக்கீர் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் பக்கீர் அலி பதவி ஏற்றதன் பின் ஏனைய பயிற்சியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்;பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்