சர்ச்சையில் சிக்கிய கனேடிய பிரதமர்!

பொது மக்களுடனான உரையாடலின் போது கனடா பிரதமர் கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை டவுன் ஹாலில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே பொது மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது இளம் பெண் ஒருவர் எழுந்து நின்று அமைச்சரவையில் பாலின சமநிலைக்கு ஏற்ப அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவை புகழ்ந்தார்.

அத்துடன் கொரிய தேவாலயத்தில் தாம் உறுப்பினராக இருந்து சேவை செய்வதை குறிப்பிட்டு நாட்டின் பொருளாதாரம் பெண்களால் நிரம்பியிருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய இளம் பெண் தன்னார்வ மற்றும் மத அமைப்புக்களின் கொள்கை பற்றி பிரதமரின் பார்வை எவ்வாறு உள்ளது என்று கேட்டார். இறுதியாக அந்த இளம் பெண் தாயின் அன்புதான் மனிதனின் எதிர்காலத்தை மாற்றப் போகும் சக்தி என்றார்.

அப்போது கையசைத்து இடைமறித்த பிரதமர் மனிதனின் எதிர்காலம் என்பதை விட மக்களின் எதிர்காலம் என்று மாற்றி சொல்லுங்கள் என்றார். அதற்கு அந்த பெண்ணும் ஆமாம் சரி என்று அவ்வாறே மாற்றி கூறியுள்ளார்.

பொது இடத்தில் பேசும் போது நாகரிகம் கருதி பிரதமர் அவ்வாறு செய்திருக்க கூடாது என பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனை தொடர்ந்து கன்சர்வேடிவ் ஃபெடரல் கட்சியை சேர்ந்த மைக்கேல் ரெம்பல் பிரதமரால் குறுக்கீடு செய்யப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்