வால்பாறை அருகே குழந்தையை கடித்து தின்ற சிறுத்தை

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியின் அருகே வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சிறுத்தை கடித்ததில் உயிரிழந்தது. சிறுத்தையை பிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வால்பாறையை அடுத்து நடுமலை எஸ்டேட் பகுதியில் செயுதுல் (4). இவர் தெருவில் விளையாடி கொண்டிருக்கும் போது சிறுத்தை நேற்று கவ்வி சென்றது . சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்களும், வனத்துறையினரும் தேடினர்.

பின்னர் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேயிலைச் செடிகளுக்கு அடியில் தலை தனியாகவும் உடல் தனியாகவும் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து காவல் துறையினர், வட்டாட்சியர் விரைந்தனர். மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்