இன்றைய காலைக் காட்சி

விடிஞ்சு எழும்பி
வெளியே பார்த்தேன்
நாட்டின் காலை
மாற்றமாய் இருந்தது.

‘மொட்டு’ விரிஞ்சி
முழுதாய் சிரித்தது.

tamilcnn.lk

‘யானை’யை சால்வையால்
யாரோ கட்டிப் போடிருந்தார்கள்.

வெத்திலையை மென்று கசக்கி
சுத்தியெறிந்திருந்தார்கள்.

‘வீட்டுக்குள்’ வெளிச்சம்
வெற்றியாய் நுழைந்தது.

‘மரம்’ சாய்ந்து
இரண்டொரு இலையுடன்
பிரண்டு கிடந்தது.

ஆலய ‘மணி’யை
அடிக்கின்ற ஓசை
லேசாய் கேட்டது.

சில புதுப் பூக்கள்
சிறிதாய் பூத்திருந்தன.

பாய்வதற்குத் தயாராக
பல தவளைகள்
தாமைரை இலை நோக்கி
தவம் இருந்தன.

நீங்க நல்லவரா கெட்டவரா
ஆங்காங்கே வண்டுகள்
ரீங்காரம் இட்டன
மொட்டை நோக்கி.

மொட்டை, ‘மொட்டை’-கள் மீண்டும்
கட்டுப் படுத்துமோ.
பக்கத்து வீட்டுப் பையன்
பரிதாபமாய்க் கேட்டான்.

இல்லை என்றே
என்மனம் நம்புகிறது.

தொப்பியைப் போட்ட ஒருவர்
தூரத்தில் சொல்வது
காதில் கேட்டது

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்