‘வருங்கால முதல்வர்’ விஜய் சேதுபதி; இது தெரியுமா

வருங்கால முதல்வர் விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் கூறியதை கேட்டு அவருக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சாம். நடிகர்கள் ஆளாளுக்கு அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிம்பு கூட அரசியலுக்கு வரப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. விஷால் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளார்.

tamilcnn.lk

சிறப்பு விருந்தினர் படங்களில் பிசியாக இருந்தாலும் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி. யார் நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் பந்தா காட்டாமல் செல்கிறார்.

ரசிகர்கள் அண்மையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் அங்கிருந்து கிளம்பும்போது ரசிகர்கள் வருங்கால முதல்வர் என்று கோஷமிட்டுள்ளனர்.

நடிகர் வருங்கால முதல்வர் என்று கோஷமிட்டவர்களை பார்த்து விஜய் சேதுபதிக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சாம். போதும்யா என்று சைகை செய்திருக்கிறார். சரி விடுங்க விஜய் சேதுபதி, உங்களை பார்த்த மகிழ்ச்சியில் கொஞ்சம் ஓவரா கூவிட்டாங்க.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்