மனைவியை 21 முறை கத்தியால் குத்திய கொடூரன்

இந்திய தலைநகர் டெல்லியில் மனைவியை 21 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேவேந்திர தாஸ் என்ற குறித்த நபர் கடந்த 2012 அக்டோபர் மாதம் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பச்சண்டை காரணமாக பின் தலையில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

இருப்பினும் அவர் மீதான ஆத்திரம் அடங்காத நிலையில் சற்றும் ஈவு இரக்கமின்றி மிருகத்தனமான முறையில் இருபத்தி மூன்று முறை தன் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுனில் கவுர் மற்றும் பிரதீபா எம் சிங் ஆகியோர்,

மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த தேவேந்திர தாஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்