காலா – பாட்ஷா ஒரு ஒப்பீடு

ரஜினி நடித்துள்ள காலா படம் வருகிற ஏப்ரல் 27ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினியுடன் ஹூமா குரேஷி, சமுத்திரகனி, நானா படேகர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார். ரஜினி நடித்த பாட்ஷா படம் 1995ம் ஆண்டு வெளிவந்தது. இதில் ரஜினியுடன் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், சரண்ராஜ், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். இரு படங்களுக்கும் ஒரு சிறிய ஒப்பீடு.

tamilcnn.lk

காலாவில் ரஜினி மும்பை தாதா, பாட்ஷாவிலும் ரஜினி மும்பை நிழல் உலக தாதா. பாட்ஷாவும், காலாவும் மும்பை தமிழர்களின் காட்பாதர்கள். இரண்டு படங்களின் கதை களமும் தாராவி தான். காலாவின் நண்பர் சமுத்திரகனி, பாட்ஷாவின் நண்பர் சரண்ராஜ். இரண்டு படத்துக்குள் உள்ள வித்தியாசம். பாட்ஷா கோட் சூட் அணிந்த தாதா, காலா வேட்டி சட்டை அணிந்த தாதா.

பாட்ஷா வெள்ளி விழா கண்ட படம். காலா வெள்ளி விழா காணுமா என்பது ஏப்ரல் மாத இறுதியில் தெரியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்