புதிய துடுப்பட்ட வரிசையை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபை

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் ரொஷான் சில்வா 29 இடங்கள் முன்னேறி 49வது இடத்தை பிடித்துள்ளார்.

இதுவரையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள ரொஷான் சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி, தரப்படுத்தலில் முன்னிலைப்பெற்றுள்ளார்.

tamilcnn.lk

ரொஷான் சில்வா இந்திய அணிக்கெதிராக டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் அறிமுக இன்னிங்ஸில் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்திருந்தார். எனினும் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார்.

இதேபோட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை குவித்த இவர், பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 109 ஓட்டங்களையும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 56 மற்றும் 70* ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதேவேளை இலங்கை அணிசார்பில் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் தினேஸ் சந்திமால் 12, குசால் மெண்டிஸ் 21, எஞ்சலோ மெத்தியூஸ் 24, கருணாரத்ன 32, தனஞ்சய டி சில்வா 38 மற்றும் நிரோஷன் டிக்வெல்ல 45வது இடத்தையும் பிடித்துள்னளனர்.

இதனையடுத்து பந்து வீச்சாளர்கள் பட்டியலில் தனது அறிமுகப்போட்டியில் 8 விக்கட்டுகளை வீழ்த்திய அகில தனஞ்சய 58வது இடத்துக்கு நேரடியாக முன்னேறியுள்ளதுடன், சுராங்க லக்மால் 30வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்